![]() |
பச்சை சதுக்கத்தை கைப்பற்றிய மகிழ்ச்சியில் கிளர்ச்சியாளர்கள் |
பச்சை சதுக்கத்தைக் கைப்பற்றிய மகிழ்ச்சியில் கிளர்ச்சியாளர்கள் பெரும்திரளாக அங்கு கூடி தமது கொடிகளைப் பறக்கவிட்ட்டுள்ளதுடன், வெற்றிக் கோஷங்களை முழங்கி, மகிழ்ச்சி ஆரவாரத்திலும் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.
![]() |
சைப் அல் இஸ்லாம் கடாஃபியின் மகன்களுள் ஒருவர் |
![]() |
கடாஃபி தனது பாதுகாவலருடன் |
![]() |
திரிபோலி மீது நேட்டை விமானத் தாக்குதல் |
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (21-08-2011) நண்பகல் முதல் தலைநகரில் இடம்பெற்று வருகின்ற கடும் மோதல்களினால், சுமார் 1300 பொதுமக்கள் பலியாகியிருப்பதாகவும், சுமார் 5000 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள, லிபிய தகவல்துறை அமைச்சர் மௌஸா இப்றாஹீம், காயமடைந்தவர்களுக்கான சிகிச்சைகளை அளிப்பதற்கு வைத்தியசாலைகளில் போதிய வசதிகள் இல்லாத இக்கட்டான நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், தலைநகர் திரிபோலியை கிளர்ச்சியாளர்களிடம் இருந்து மீட்டெடுக்கும் போரை முன்னெடுக்குமாறு லிபிய அரச தொலைக்காட்சி ஊடாக கடாஃபி நேற்று ஞாயிற்றுக்கிழமை தமது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.