July 1, 2022
கடாஃபி ஆதரவாளர்களுடன்
தமது எதிரிகளுடன் தொடர்ந்து போராடுவதாக அஞ்ஞாதவாசம் பூண்டுள்ள லிபிய முன்னாள் தலைவர் கேர்ணல் முஅம்மர் கடாஃபி கூறியுள்ளார்.
கடாஃபிக்கு ஆதரவான தொலைக்காட்சி ஒன்றுக்கு அனுப்பி வைத்துள்ள ஒலிநாடாவில் அவர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.

“லிபிய மக்கள் மண்டியிட மாட்டார்கள், சரணடையவும் மாட்டார்கள், நாங்கள் பெண்கள் அல்ல” ஆகிய வாசகங்களை, அல்-ராய் என்ற தொலைக்காட்சிக்கு கடாஃபி அனுப்பி வைத்துள்ள ஒலிநாடாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லிபிய வரைபடம்
இந்த நிலையில் கடாஃபியின் சொந்த ஊரான சர்ட்டை, கிளர்ச்சியாளர்கள் சுற்றிவளைத்து தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றதுடன், கடாஃபி ஆதரவாளர்கள் சரணடைய மேலும் ஒருவார கால அவகாசம் வழங்கியுள்ளனர்.
எனினும், கடாஃபி எந்த இடத்தில் தலைமறைவாக இருக்கின்றார் என்பது குறித்து இதுவரை கிளர்ச்சிப் படைகளால் கண்டறியப்படவில்லை.
இதேவேளை, லிபியாவின் எதிர்காலம் குறித்து ஆராய்வதற்காக சிரேஷ்ட இராஜதந்திரிகள் பாரிஸில் சர்வதேச பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தி வருகின்றனர்.
கேர்ணல் கடாஃபி வெளியிட்டுள்ள சுமார் பத்து நிமிட குரல் பதிவு அடங்கிய ஒலிநாடாவில், காலணித்துவத்துக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடுவார்கள் என்றும் கடாஃபி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சுமார் இருபதாயிரம் பேர், சர்ட் பிரதேசத்தில் ஆயுதங்களுடன் நிலைகொண்டு கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போராடி வருவதாக கடாஃபியின் மகன்களுள் ஒருவரான ஸைப் அல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.