July 2, 2022

காலணித்துவ ஆட்சி மற்றும் கைத்தொழில் மாற்றங்களினால் இடையிடையே பல்வேறு தடைகள் ஏற்பட்ட போதிலும் இலங்கையின் தாவரவியல் பூங்காவுக்கு மிக நீண்ட வரலாறு உண்டு.
எனினும், இந்த காலகட்டங்களிலும் பூங்கா தொடர்ச்சியாக முனைப்புடன் இயங்கி வந்துள்ளதோடு தாவரங்களின் தொகுப்பும், தாவர தொகுப்புக்கூடமும் விருத்தியடைந்துள்ளது.

பூங்கா வரைபடம்
21ஆவது நூற்றாண்டை கருத்திற்கொள்ளும் போது தாவரவியல் பூங்காவின் மூலம் இலங்கைக்கு கணிசமான தேசிய வருமானத்தை ஈட்டிக்கொடுத்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் சுமார் 14 இலட்சத்துக்கும் அதிகமானோர் இலங்கையின் தாவரவியல் பூங்காவினைக் காண வருகின்றார்கள். 
இது வருடந்தோறும் வருகை தருகின்ற 5 வீதமான உள்ளூர் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கைக்கு மேலதிகமானதாகும். 
பார்வையாளர்கள் அனுபவிக்கின்ற இன்பத்தையும் மகிழ்ச்சியையும் சாதகமாக்கிக்கொண்டு எமது வளர்ந்து வருகின்ற அறிவு மற்றும் பேணல், உயிர் பல்வகைமை, மலர் செய்கை அத்துடன் சுற்றாடல் சமநிலையைப் பேணுதல் என்பன தொடர்பிலான நிபுணத்துவ அறிவினைப் படிப்படியாக அவர்களுடன் பகிர்ந்துகொண்டு, சுமார் 450 பேர் கொண்ட குழுவினரை சேவையில் ஈடுபடுத்தியுள்ள, இலாபம் ஈட்டுகின்ற பகிரங்க நிறுவனமென்ற வகையில் தேசிய தாவிரவியல் பூங்கா அறியாமலேயே அறிவைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய உன்னதமான வகையில் நிலைபெற்று விளங்குகின்றது.
பூங்காவின் சில உட்காட்சிகள்…

போஷிக்கப்படும் மலர்களில் சில…

வரலாறு

றோயல் தாவரவியல் பூங்கா பற்றிய வரலாறு‚ 111 ஆவது விக்கிரமபாகு மன்னன் சிங்காசனம் கிடைக்கப்பெற்று தனது அரச மாளிகையை பேராதனையில் மகாவலி கங்கைக்கு அருகாமையில் அமைத்துக் கொண்ட 1371 ஆம் ஆண்டு வரை முன்னோக்கிச் செல்கின்றது. 
பின்னர்‚ கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்க மன்னனின் ஆட்சிக் காலத்தினுள்‚ (1747 முதல் 1780 வரையில்)‚ இது முடிக்குரிய பூங்காவாகக் காணப்பட்டதுடன்‚ ராஜாதி இராஜசிங்க மன்னன் தமது ஆட்சிக் காலத்தில்‚ (1780 முதல் 1798 வரையில்)‚ தற்காலிக வாசஸ்தலமொன்றை இங்கு அமைத்து அதில் வசித்து வந்தார். 
விமலதர்ம மன்னனின் ஆட்சிக் காலத்திலே இந்த இடத்தில் ஒரு விஹாரையும் தாதுகர்ப்பம் ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டது. பின்னர் ராஜாதி இராஜசிங்க மன்னன் அவற்றை புனரமைத்தார். 
கண்டியை ஆக்கிரமித்ததன் பின்னர் ஆங்கிலேயர் இந்த விஹாரையையும்‚ தாதுகர்ப்பத்தையும் அழித்தனர். இரண்டாம் இராஜசிங்க மன்னனுக்கும் போர்த்துக்கேயர்களுக்குமிடையில் நடைபெற்ற வரலாற்று ரீதியில் பிரசித்தி பெற்ற கன்னொருவை போர் இந்த பூங்காவின் வடக்குப் பிரதேசத்தில் நதிக்கு அக்கரையிலேயே இடம்பெற்றது. 
கண்டி இராசதானியை முழுமையாகக் கைப்பற்றி ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர்‚ அதாவது 1821 ஆம் ஆண்டிலே அலெக்ஸான்டர் மூன் அவர்கள் இந்த பூங்காவை ஒழுங்கமைக்கும் வரையில் மதத் தலைவர் ஒருவர் இங்கு வசித்துவந்தார். 
1810 ஆம் ஆண்டிலே சேர் ஜோசப் பென்க்ஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் கிவ் எனும் பெயரில் பூங்காவொன்று கொம்பனித்தெருவில் திறந்து வைக்கப்பட்டதுடன்‚ அதன் பொறுப்பாளராக வில்லியம் கர் அவர்கள் நியமிக்கப்பட்டார். 
கொம்பனித்தெரு பூங்காவில் பயிரிடக் கூடிய அளவிலும் பார்க்க கூடுதலான அளவு பொருளாதார பெறுமதிமிக்க மரங்கள்‚ செடிகள் என்பவற்றை பயிரிடக் கூடியதாக இருந்தமையால் 1813 ஆம் ஆண்டு இந்த பூங்கர களுத்துறைக்கு கொண்டு செல்லப்பட்டது. 
கர் அவர்கள் 1814 ஆம் ஆண்டு காலஞ் சென்றதுடன் அவரது பதிலாளான அலெக்ஸான்டர் மூன் அவர்களின் பொறுப்பின் கீழ் இந்தப் பூங்காவானது 1821 ஆம் ஆண்டு பேராதனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. உத்தேச தாவரவியல் பூங்காவிற்கான மிகவும் பெருத்தமான மற்றும் தகுதியான இடமாக பேராதனை தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தமையால் பேராதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

Leave a Reply

Your email address will not be published.