July 1, 2022

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என்பது ஆட்சி மாற்றத்திற்கான ஒரு தேர்தல் அல்லவென பொதுவாக அரசியல் ஞானமுள்ள அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் என்பனவே ஆட்சி மாற்றத்திற்கும், மக்களின் ஆட்சியாளர்கள் மீதான நம்பிக்கையை பரீட்சிப்பதற்கும் சிறந்த களங்களாகும்.
எந்தவொரு தனிக் கட்சி அல்லது கூட்டணி தங்கள் சார்பாக நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவியையும், பாராளுமன்ற அதிகாரத்தையும் கொண்டுள்ளதோ அந்த கட்சி ஏனைய சிறிய தேர்தல்களிலும் வெற்றி பெறும் என்பது இலங்கை அரசியலின் வரலாற்று உண்மையாகும்.

அத்துடன் மாகாண சபைத் தேர்தலிலோ அல்லது உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலோ மக்களின் வாக்களிப்பு வீதம் குறைந்தே காணப்படும்.
எனினும், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக மக்கள் தமக்கும், தமது பிரதேசத்திற்கும் நேரடி அபிவிருத்திகளையும், இன்னோரன்ன அரசாங்க சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த நிலைமையில் 2015 ஜனவரி 8 ஆட்சி மாற்றத்தின் பின்னர் நல்லாட்சி அரசின் கீழ் நடைபெறவுள்ள முதலாவது உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் முஸ்தீபுகளில் அரசியல் கட்சிகள் முனைப்புடன் கருமங்களை மேற்கொண்டு வருகின்றன.
கூட்டணிகளை உருவாக்குதல், கட்சித் தாவல்களல் ஈடுபடுதல், பேரம் பேசுதல் என்பன இப்போது திரைமறைவில் இடம்பெற்று வருகின்றன.
வெவ்வேறு காலப்பகுதிகளில் கட்டம் கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு வந்த வரலாற்றை மாற்றி இம்முறை ஒரே தினத்தில் தேர்தல் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
எது எப்படி இருப்பினும், அரசியல் கட்சிகளின் பலப்பரீட்சைக் களமாக எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கருதாமல், தமது பிரதேசத்திற்கும், கிராமத்திற்கும் உண்மையான சேவையை ஆற்றக்கூடியவர்களை பிரதிநிதிகளாக தேர்ந்தெடுப்பதற்கு மக்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவது அவசியமாகும்.

Leave a Reply

Your email address will not be published.