கம்பளை, வெவதென்ன பகுதியில் முச்சக்கர வண்டியொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (10) மாலை 5.30 அளவில் இடம்பெற்றுள்ளது.
காஹவத்தை பகுதியிலிருந்து கம்பளை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி வெவதென்ன பாடசாலைக்கு அருகால் பயணித்தபோது வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.
முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
முச்சக்கர வண்டி சாரதி பலத்த காயங்களுடன் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.