கம்பளை நகர சபையின் அதிகாரத்தை ஐக்கிய தேசிய கட்சி தன்வசப்படுத்தியுள்ளது.
கம்பளை நகர சபைக்கான தவிசாளர் தெரிவு இன்று (10) இடம்பெற்றது.
இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் சமந்த அருணகுமார ஏகமனதாக தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
உபதலைவராக எம். புர்கான் ஹாஜியார் தெரிவு செய்யப்பட்டார்.
கம்பளை நகர சபையின் 13 ஆசனங்களை ஐக்கிய தேசிய கட்சி (UNP) கைப்பற்றியிருந்தது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 8 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (UPFA) 6 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி (JVP) 1 ஆசனத்தையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, உடபலாத்த பிரதேச சபையின் தலைவராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் என்.டி. குணசேன 26 வாக்குகளைப் பெற்று சபையின் தவிசாளராக தெரிவானார்.
உபதலைவராக ஐக்கிய தேசிய கட்சியின் அகலவத்த தெரிவாகினார்.