புதிய தேர்தல் முறையின் கீழ் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பல்வேறு சிக்கல்களை தோற்றுவித்துள்ளன.
இதன் பிரகாரம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான மேயர்கள், தவிசாளர்கள், துணைத் தவிசாளர்களை தெரிவு செய்வதில் மீண்டும் வாக்கெடுப்புகளை நடத்த வேண்டியுள்ளது.
அத்துடன் தேர்தலில் வெற்றிபெற்ற கட்சியால் நேரடியாக ஆட்சியை அமைக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
புதிய முறையின் கீழ், உள்ளூராட்சி சபைகளில் வருடா வருடம் அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருதடவை தவிசாளர்களை மாற்றக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்றும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே சிக்கல் மிகுந்த புதிய முறையை தவிர்த்து, அடுத்துவரக்கூடிய தேர்தலை பழைய முறையின் கீழ் நடத்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் இணங்கியுள்ளன.
இதன்பொருட்டு கட்சித் தலைவர்களின் கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளது என அமைச்சர் கண்டியில் வைத்து நேற்று ஊடகங்களுக்கு குறிப்பிட்டிருந்தார்.