பாராளுமன்ற உறுப்பினர்களின் பாவனைக்காக பாராளுமன்ற சபையில் ஒவ்வொரு ஆசனங்களுக்காகவும் வைக்கப்பட்டுள்ள மடிக் கணனிகளை பெரும்பாலான உறுப்பினர்கள் பயன்படுத்துவதில்லை எனத் தெரியவந்துள்ளது.
பாராளுமன்றத் தகவல்கள் அனைத்தும் அந்த கணனிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளபோதிலும் பெரும்பாலான உறுப்பினர்கள் அவற்றை பயன்படுத்துவதில்லை என்று பாராளுமன்ற உத்தியோகத்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான இந்த கணனி கட்டமைப்பை ஏற்படுத்துவதற்காக பல கோடி ரூபா அரச பணம் செலவிடப்பட்டுள்ளது.
எனினும், பாராளுமன்ற உறுப்பினர்கள் அவற்றைப் பயன்படுத்தாமையால், பொது மக்களின் பணம் விரையமாக்கப்பட்டுள்ளதாக முனுமுனுப்புகள் தற்போது வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
#lk #lka #srilanka #prliament #laptop #mp