July 2, 2022
CORONA: ரஷ்யாவில் மக்கள் ஒன்றுகூடுவதை தடுப்பதற்கு வீதிகளில் 500 க்கும் மேற்பட்ட சிங்கங்கள் நடமாடவிடப்பட்டுள்ளன.
———————————–
கொரோனா வைரஸ் பரவுவதில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக மக்கள் ஒன்றுகூடுவதையும், அநாவசியமாக நடமாடுவதையும் தடுப்பதற்காக ரஷ்யாவில் அந்த நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 800 சிறுத்தைகளையும், 500 சிங்கங்களையும் வீதிகளில் திறந்துவிட்டுள்ளதாக இன்றைய தினம் (22) பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் சமூகள வலைதளங்களில் வௌியாகியிருந்த செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என்பதை உறுதிசெய்ய முடிந்தது.
வீதியொன்றில் சிங்கமொன்று நடமாடுவதை சித்தரிக்கும் நிழற்படம் மூலம் வௌியிடப்பட்ட இந்த தகவல் குறித்து FACT CHECK செய்தபோது அது 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி imgur.com/gallery/d3YWiC4 என்ற link ஊடாக பதிவிடப்பட்ட ஒரு நிழற்படம் மற்றும் வேறு தகவல் என்பதை ஊர்ஜிதம் செய்துகொள்ள முடிந்தது.
இந்த சிங்கத்தின் நிழற்படத்தைப் பயன்படுத்தி, தற்போது ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்று நிலைமையில் ரஷ்ய மக்களை மேலும் அச்சத்திற்குள் ஆழ்த்தும் வகையில் பின்வரும் link ஊடாக திரிபுபடுத்தப்பட்ட தகவல் வௌியிடப்பட்டிருந்தது.
இதனை எமது நாட்டிலும் பலர் உண்மையை ஆராயாது சமூக ஊடகங்கள் வாயிலாக இன்று பகிர்ந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
இதன்மூலம் அறிந்தோ அல்லது அறியாமலோ போலியான திரிபுபடுத்தப்பட்ட தகவல்கள் மூலம் சமூகத்தை தவறான திசைக்கு இட்டுச் செல்வதற்கு வழியேற்படுத்துவதாக அமைந்துவிடுகின்றது.
எனவே சர்வ சாதாரணமாக சமூக ஊடகங்கள் வாயிலாக போலிச் செய்திகள் பகிரப்பட்டு வருவதை தடுப்பதற்கான வழிமுறைகளை நாம் பின்பற்றுவது மிகவும் அவசியமாகும்.
நன்றி

Leave a Reply

Your email address will not be published.