
இந்த முழு அடைப்பு இன்று (24) நள்ளிரவு முதல் எதிர்வரும் 21 நாட்களுக்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக இந்திய தகவல்கள் உறுதிசெய்துள்ளன.
தத்தமது வீடுகளில் இருந்து எவரும் வௌியேறுவதற்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி ஊடாக நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது தெரிவித்துள்ளார்.
1.3 பில்லியன் சனத் தொகையைக் கொண்ட இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதால், நாடளாவிய முழு அடைப்பிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உலகில் மொத்தமாக 400,000 இலட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமை உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 17,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துச் செல்கின்றது.
இந்த நிலைமையின் கீழ், இந்தியாவில் இதுவரை 519 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 10 மரணங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.