July 2, 2022

கொரோனா வைரஸ் பரவலை கருத்திற் கொண்டு மிகவும் இடர் பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டிருந்த கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்குமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை, மார்ச் 27 வெள்ளிக் கிழமை காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படுகின்றது.

அத்துடன் அந்த மாவட்டங்களில் அன்றைய தினமே பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும்.

இந்த மாவட்டங்களில் மார்ச் 30 திங்கட்கிழமை காலை 6.00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு, அன்றைய தினம் பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப் பகுதியில் மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை வீடுகளில் இருந்தே கொள்வனவு செய்யக்கூடிய வகையில் தொடர்ச்சியாக ஒதுக்கீடுகளை மேற்கொள்ள அரசாங்கம் சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் பற்றிய இந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள நேரங்கள் மீண்டும் அறிவிக்கப்படும் வரை நடைமுறையில் இருக்குமெனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.