நாட்டில் இந்து ஆலயங்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக வௌியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என புத்தசான, கலாசார மற்றும் மத விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அறிக்கையொன்றை விடுத்துள்ள அமைச்சின் செயலாளர் எம்.கே. பந்துல ஹரிஸ்சந்திர வதந்திகளை நம்பவேண்டாம் என கேட்டுள்ளார்.
திருகோணமலை ஆலயம், நல்லூர் கந்தசுவாமி ஆலயம், ரம்பபொட ஆலயம் ஆகிய வழிபாட்டுத் தளங்கள் சேதமடைந்துள்ளதாக இன்று அதிகாலை செய்திகள் பரவியிருந்தன.
இந்த செய்திகளில் எவ்வித உண்மைத் தன்மையும் காணப்படவில்லை என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
போலிச் செய்திகளை பரப்புவோருக்கு எதிராக உரிய கடும் சட்ட நவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக புத்தசாசன, கலாசார மற்றும் மதவிவகாரங்கள் அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.