July 4, 2022

லண்டனில் வசித்துவந்த இலங்கையர் ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

மஹரகம பகுதியைச் சேர்ந்த 55 வயதான லக்‌ஷான் விஜேரத்ன என்பவரே லண்டனின் ஃபெல்தம் பகுதியில் வைத்து உயிரிழந்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் வைரஸினால் பீடிக்கப்பட்ட கடந்த சில நாட்களாக வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மூன்றாவது நபரின் மரணம் நிகழ்ந்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துவந்த இலங்கையர் ஒருவர் கடந்த வாரத்தில் உயிரிழந்ததை அடுத்து, கொரோனா வைரஸ் காரணமாக முதலாவது இலங்கைப் பிரஜையின் மரணம் பதிவாகியது.

யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியிலிருந்து சுவிட்சர்லாந்திற்கு குடிபெயர்ந்த 59 வயதான நபரே கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்த முதலாவது இலங்கையர் ஆவார்.

இரண்டாவது இலங்கையரின் மரணம் இன்று நிகழ்ந்ததுடன், இலங்கைக்குள் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இடம்பெற்ற முதலாவது மரணமாக இது பதிவாகியது.

மாரவில பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஒருவரே வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தார்.

Leave a Reply

Your email address will not be published.