July 1, 2022

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் மறுஅவிறித்தல் வரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் இன்று (30) பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் ஏப்ரல் 01 ஆம் திகதி காலை 6.00 மணிவரை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தவிர வேறு நடவடிக்கைகளுக்காக மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துகளுக்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைதிறனுடன் முன்னெடுப்பதற்காக பின்பற்றப்பட்டு வருகின்ற வழிமுறைகளை தவறாக கையாள்கின்றவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை நிறுத்துவதற்கு ஏதுவான நடவடிக்கைகள் பெரும்பாலும் மக்களின் நலன்கருதியே முன்னெடுக்கப்பட்டு வருவதால், அதற்குரிய ஆலோசனைகளை உரிய வகையில் பின்பற்றுமாறும் அரசாங்கம் மக்களிடம் கேட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் அட்டுளுகம மற்றும் கண்டி மாவட்டத்தின் அக்குரண கிராமங்கள் தற்போது முற்றாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

மக்கள் அந்த கிராமங்களுக்குள் செல்வதையும், அங்கிருந்து வௌியேறுவதையும்  மறு அறிவித்தல் வரை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.