இலங்கை போன்ற இடர்நிலைக்கு உள்ளாகியுள்ள அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு உதவிபுரியுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சர்வதேச நிதி நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
சுற்றுலாத்துறை, ஏற்றுமதி, வெளிநாடுகளில் தொழில் செய்கின்றவர்களிடமிருந்து கிடைக்கும் வருமானம் மற்றும் கடன், பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகளில் தங்கியுள்ள பொருளாதாரங்களை கொண்டுள்ள அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.
உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்துடன் தொலைபேசியில் உரையாடிய ஜனாதிபதி இதுகுறித்து கோரிக்கையை விடுத்துள்ளதாக ஜானதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கடன் தவணை உரிமையை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர், உலக வங்கியின் தலைவர், ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மற்றும் இருதரப்பு கடன் வழங்கும் முன்னணி நாடுகளின் தலைவர்களின் இணக்கத்தையும் பெற்றுக்கொள்ளுமாறு சர்வதேச நிதி நிறுவனங்களிடம் ஜனாதிபதி மேலும் கோரியுள்ளார்.