பேஸ்புக் சமூக ஊடக வலைதளத்தில் கொவிட் வைரஸ் தொடர்பான போலித் தகவல்களை வௌியிட்டதாக கூறப்படும் பல்கலைக்கழக மாணவன் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய உறுப்பினர் ஒருவரே இவ்வாறு குற்றப்புலனாய்வுத் திணைக்கள உத்தியோகத்தர்களால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இவரை எதிர்வரும் ஏப்ரல் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சன நெரஞ்சலா டி சில்வா இன்று (02) உத்தரவிட்டார்.
கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியின் வைத்தியகூடம், கொவிட்-19 தொற்றுக்குள்ளான முக்கிய பிரமுகர்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி போலியான தகவலை பரப்பியிருந்ததாக இந்த பல்கலைக்கழக மாணவர் மீது குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.