கொவிட்-19 வைரஸ் காரணமாக மரணித்த ஜனாசாக்களை அடக்மை் செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் பேசிய பழைய குரல்பதிவை மீண்டும் மீண்டும் சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அறிக்கையொன்றின் மூலம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
கடந்த மாதம் 25 ஆம் திகதி பலரின் முயற்சிகளின் பிரகாரம் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளது என்று ஜம்மியத்துல் உலமாவின் தலைவரின் குரல்பதிவு பகிரப்பட்டு வந்தது.
இந்த சூழ்நிலையில் குறிப்பிட்ட குரல்பதிவை பகிர்ந்து வீண் பிரச்சினைகளை ஏற்படுவதற்கு இடமளிக்கக் கூடாது எனவும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கோரிக்கை விடுக்கின்றது.
அத்துடன் குறிப்பிட்ட குரல் பதிவை பகிர்ந்தவர்கள் அதனை அழித்து அல்லது ஜம்மியத்துல் உலமாவின் இந்த புதிய பதிவை பகிர்ந்து உண்மையைத் தௌிவுபடுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.