July 4, 2022

கண்டி, மஹியாவை வாழ் மக்களுக்காக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய ஒருதொகை உலர் உணவுப் பொதிகளை மஹியாவை அல் மத்ரசதுல் நூருல் ஹிதாயா பள்ளிவாசல் நிருவாகம் விநியோகித்துள்ளது.

சுமார் 400 உலர் உணவுப் பொதிகளை பிரதேச மக்களுக்காக விநியோகம் செய்ததாக பள்ளிவாசல் நிருவாக சபையின் துணைப் பொருளாளர் அப்துல் ரஹ்மான் Kandy Tamil News க்குத் தெரிவித்தார்.

இந்த உலர் உணவுப் பொதிகளை விநியோகிப்பதற்கான ஒத்துழைப்புகளை கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கம், கண்டி பள்ளிவாசல்களின் சம்மேளனம் மற்றும் நன்கொடையாளர்கள் ஆகிய தரப்புகள் வழங்கியுள்ளன.

கொவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், வருமானம் குறைந்த அடிப்படை வசதியற்ற பிரதேச மக்களுக்காக மஹியாவை மதரசதுல் நூருல் ஹிதாயா பள்ளிவாசல் நிருவாகத்தினரால், இனமத பேதமின்றி அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.