கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு தொடர்பான கட்டளைச் சட்டத்தில் இதற்கான திருத்தங்களை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தனக்குரிய அதிகாரங்களின் பிரகாரம் மேற்கொண்டுள்ளார்.
இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று (11) வௌியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய எவரேனும் கொரோனா வைரஸ் காரணமாக இறப்பதற்கு நேரிட்டால் அவரது பூதவுடலை முறைாயன அதிகாரிகளால் பெயர் குறித்து நியமிக்கப்படும் தகனத்திற்கான அத்தியாவசிய கடமைகளை பொறுப்பேற்கும் நபர் தவிர்ந்த வேறு எவரிடமும் கையளித்தல் ஆகாது என அந்த அதிவிசேட வர்த்தமானியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் அத்தகைய அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் முறையான அங்கீகரிக்கப்படும் சுடலை அல்லது இடமொன்றில் பூதவுடல் தகனம் செய்யப்பட வேண்டும் என்றும் வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.