July 1, 2022

கொரோனா வைரஸ் ஒழிப்புக்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் தற்போதைய நிலைமை குறித்து மூன்று நிகாயக்களையும் சேர்ந்த மகா சங்கத்தினருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (24) விளக்கமளித்தார்.

இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தல், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள், மக்களுக்கு வழங்கிய நிவாரணங்கள் மற்றும் எதிர்காலத்தில் சுதேச பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் குறித்தும் ஜனாதிபதி இதன் போது மகா சங்கத்தினருக்கு தௌிவுபடுத்தினார்.

நாடு எதிர்நோக்கியுள்ள சவால்களுக்கு மத்தியில் சுகாதார, பாதுகாப்பு துறைகளும் முழு அரச இயந்திரம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வழங்கிய ஒத்துழைப்பு பாராட்டத்தக்கதாக இருந்ததாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, தமக்குப் பாரிய ஆணையை வழங்கி மக்கள் தன்மீது வைத்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் பலமானதெரு பாராளுமன்றத்தின் தேவையை எடுத்துரைத்த ஜனாதிபதி, புதிய பாராளுமன்றத்தை கூட்டுவதை விடுத்து பழைய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான அதிகாரம் அரசியலமைப்பில் இல்லை என்றும் மகா சங்கத்தினரிடம் சுட்டிக்காட்டியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து கவனம் செலுத்திய மகா சங்கத்தினர், பழைய பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டி நாட்டை குழப்பமான நிலைக்கு உள்ளாக்க வேண்டியதில்லை என்றும் பழைய பாராளுமன்றத்தை கூட்டக்கூடாது என்பது மகா சங்கத்தினரின் ஏகமனதான தீர்மானம் என்றும் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

மூன்று நிகாயக்களினதும் மகா சங்கத்தினரை பிரதிநிதித்துவப்படுத்தி மகாநாயக்க தேரர்கள் மற்றும் அநுநாயக தேரர்கள் உள்ளிட்ட தேரர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(முழுமையான ஊடக அறிக்கை)

Leave a Reply

Your email address will not be published.