கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ எதிர்க்கட்சிக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
எதிர்கட்சியில் அங்கத்துவம் வகிக்கின்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களது கையொப்பத்துடன் கடந்த 26ஆம் திகதி தனக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கூட்டறிக்கைக்கு ஜனாதிபதி இந்த பதிலை வழங்கியுள்ளார்.
எதிர்க்கட்சியின் அறிக்கையில் கையொப்பமிட்டுள்ள தரப்பினர் தேர்தல் நடத்தத் தேவையில்லை என சிந்திப்பதாக தெரிகிறது என்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொவிட் 19 வைரஸை கட்டுப்படுத்தி இயல்பு வாழ்க்கையை பேணுவதற்கு முழு அரச இயந்திரமும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சி குறுகிய அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தரவின் கையொப்பத்துடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதி செயலாளரால் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதம் வருமாறு.