உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குண்டுதாரிகளுக்கு பயிற்சி வழங்கியதாக கல்பிட்டியில் கைதுசெய்யப்பட்ட நபரிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சந்தேகநபர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுதாரிகள் அடிப்படைவாத கருத்துகளை பிரசாரம் செய்வதற்கான பயிற்சிகளை வழங்கும் நோக்கில் நிலையமொன்றை நடத்தி வந்துள்ளமை குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் மேலதிக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து கல்பிட்டிய பகுதியில் வைத்து இந்த சந்தேகநபர் நேற்று (03) கைதுசெய்யப்பட்டிருந்தார்.
அரச சார்பற்ற நிறுவனமொன்றின் பெயரால் சந்தேகநபர் இந்த பயிற்சி நிலையத்தை நடத்தி வந்துள்ளதுடன், அதன் பொறுப்பாளராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.
சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.