கொவிட்-19 தொற்றுக்கு காரணமாக இலங்கையில் 8 ஆவது உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
இந்த தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஹோமாகம வைத்தியசாலையில் சிக்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த குருநாகல், பொல்பித்திகம பகுதியைச் சேர்ந்த 72 வயது பெண் ஒருவரே கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, 8 ஆவது மரணத்திற்குரிய பெண்ணின் உடல் கொட்டிகாவத்தை மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக உயிரிழந்த பெண்ணின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.