July 4, 2022

கொவிட்-19 சூழ்நிலை காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இதன்பொருட்டு புதிய பொருளாதார மாதிரியொன்றை தயாரிக்கும் பொறுப்பு இதற்காக புதிய பொருளாதார மாதிரியொன்றை தயாரிக்கும் பொறுப்பு பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி  செயலணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுற்றுலா கைத்தொழில் ஊக்குவிப்புக்கான வழிவகைகள், உயர் கல்விக்காக நாட்டிலிருந்து அந்நியச் செலாவணி வெளிச்செல்வதை குறைத்தல், உள்நாட்டில் மருந்துப்பொருள் உற்பத்தி, கடனுக்கு பதிலாக முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை ஆகிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

செயலணி விடயத் துறைகளுக்கு ஏற்ப பகுதியாக பிரிந்து இலக்குமயப்பட்ட புதிய பொருளாதார திட்டங்களை தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

மே 11 ஆம் திகதி முதல் மீண்டும் இயல்புநிலைக்கு கொண்டுவரப்படும் வாழ்க்கை முறையுடன் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பும் நோக்குடன் ஜனாதிபதி செயலணியுடன் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற முதலாவது கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பலமாக உள்ள ஆடை மற்றும் சுற்றுலாக் கைத்தொழிலை புதிய வடிவில் ஆரம்பிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

கொவிட் 19 வைரஸை ஒழித்து எழுந்துள்ள நாடுகளை இலக்காகக் கொண்டு சுற்றுலா பயணிகளை அழைத்து வர முடியும் என்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

கொவிட் 19 ஒழிப்புக்கு இலங்கை மேற்கொண்ட முறையான நடவடிக்கைகளை ஏனைய நாடுகளுக்கு எடுத்துக்கூறி சுதேச மற்றும் மேலைத்தேய சிகிச்சைக்காக சுற்றுலா பயணிகளை கவர்வதற்கு முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சுகாதார சான்றிதழுடன் வீசாக்களை வழங்கி அதிகம் செலவிடக்கூடிய இயலுமையுள்ள சுற்றுலா பயணிகளை அழைத்துவர திட்டமிட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

துறைமுக நகரம் மற்றும் ஹம்பந்தோட்டை கைத்தொழில் வலயம் ஆகியவற்றை மையப்படுத்தி வெளிநாட்டு முதலீட்டாளர்களை கொண்டுவருவதற்குள்ள வாய்ப்புகள் குறித்தும் இதன்போது ஜனாதிபதி எடுத்துக்கூறியுள்ளார்.

வெளிநாட்டு கடனுக்கு பதிலாக முதலீட்டு வாய்ப்புகளுக்கு திட்டமிடும் பொறுப்பு அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு இதன்போது வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக பல புதிய ஆக்கங்கள் நாட்டில் உருவாகியுள்ளன. அவற்றை உலக சந்தைக்கு அறிமுகப்படுத்தி புதிய உற்பத்திகளை ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகள் குறித்தும் இங்கு மேலும் கலந்துரையாடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.