July 4, 2022

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 16 ஆம் திகதி, சனிக்கிழமை வரை இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் மே 17 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் மே 18 ஆம் திகதி, திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்பட்டதன் பின்னர் மே 23 ஆம் திகதி சனிக்கிழமை வரை இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00மணி வரை மட்டுமே அமுலில் இருக்கும்.

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபோதிலும் இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதார செயற்பாடுகளை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்காக கடந்த 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை வரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.

அதன் பின்னர் மே 18 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் முன்னெடுக்கப்படும்.

முன்னர் வெளியிடப்பட்ட அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்டுள்ள இயல்பு வாழ்ககைக்கான செயற்திட்டங்களுடன் தொடர்புடைய நிபந்தனைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


#ARREST #BREAKING #CoronaVirus #COVID19 #ARREST  #CURFEW #Local #SocialMedia #Srilanka

Leave a Reply

Your email address will not be published.