July 2, 2022

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மறுஅறிவித்தல் வரை நாளை (26) முதல் இரவு 10 யில் இருந்து அதிகாலை 4 மணிவரையில் 6 மணித்தியாலங்களுக்கு மாத்திரம் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன் பிரகாரம் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரையான காலப்பகுதியில் மாத்திரமே ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக சுகாதார தரப்புகளால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த வழிகாட்டல் முறைகளை தொடர்ந்தும் பேணுமாறும் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள், நிறுவனங்கள், அலுவலகங்கள், விற்பனை நிலையங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்துகளிலும் இந்த சுகாதார வழிகாட்டல் முறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் சமூக இடைவௌி பேணப்படுவதுடன், முகக் கவசம் அணிதல், கைகளை அவ்வப்போது தேவையான சந்தர்ப்பங்களில் சுத்தமாக கழுவிக் கொள்வதன் மூலம் வைரஸ் தொற்றுக்கு இலக்காவதில் இருந்து பாதுகாத்துக் கொள்ளமுடியும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுகாதார வழிகாட்டல் முறைகளைப் பின்பற்றுவதற்குரிய சூழ்நிலைகள் மற்றும் சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொருத்து தமது ஊழிர்களுக்கான அழைப்புகளை அரச மற்றும் தனியார் துறையில் விடுக்கமுடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் காலப்பகுதியில் தங்களிள் நாளாந்த நடவடிக்கைகளில் ஈடுபடும்போது பொது மக்கள் சுகாதார வழிகாட்டல்களை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும்.
கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துகளுக்கும் நாளை (26) முதல் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.