எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் ஜூன் 06 ஆம் திகதி சனிக்கிழமை வரையிலும் அமுல்படுத்தப்படவுள்ள ஊரடங்குச் சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மே 31 ஆம் திகதி நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 01 ஆம் திகதி முதல் ஜூன் 03 ஆம் திகதி வரை அனைத்து மாவட்டங்களிலும் இரவு 10 மணிமுதல் அதிகாலை 04 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்.
அதன் பின்னர் ஜூன் 04 மற்றும் ஜூன் 05 ஆகிய இரண்டு நாட்களிலும் நாடு முழுவது்ம் ஊரடங்கு பிறப்பிக்கப்படும்.
ஜூன் 06 ஆம் திகதி சனி்க்கிழமை முதல் அனைத்து மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் இரவு 10 மணிமுதல் அதிகாலை 04 மணிவரை அமுல்படுத்தப்படவுள்ளது.
இதவேளை, கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துகளுக்கு அனுமதிளிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது.