July 4, 2022

பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் திகதி தொடர்பான தீர்மானத்தை நாளை (03) அறிவிப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதுதொடர்பான தீர்மானத்தை மேற்கொள்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் நாளை கூடவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவரான மஹிந்த தேசப்ரிய குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் திகதியை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்ததை அடுத்து, மஹிந்த தேசப்ரிய இதனைக் கூறியுள்ளார்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை மற்றும் பொதுத் தேர்தல் நடைபெறும் திகதி ஆகிய விடயங்களை ஆட்சேபித்து 7 மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த போதிலும், கொவிட்-19 பரவல் காரணமாக அந்த திகதி ஜூன் 20 க்கு பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.