மடுல்சீமை, கெரடி எல்ல பகுதியில் நீர் நிலையொன்றினுள் குளிக்க முற்பட்ட தந்தை, மகள் மற்றும் உறவின சிறுமி என 03 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று காலை 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மடுல்சீமை பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி மூலமான தகவலுக்கு அமைவாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான தந்தை, 13 மற்றும் 12 வயதுகளையுடைய இரண்டு சிறுமிகளே நீரில் மூழ்கி உயிரிழந்துளளனர்.
இந்த சடலங்கள் தொடர்பான மரண விசாரணைகள் பசறை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படுவதுடன், மடுல்சீமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.