இந்திய தலைநகர் புதுடில்லியில் ஜூலை மாத இறுதிக்குள் சுமார் 5 இலட்சம் பேர் வரை கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இலக்காகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில், கொவிட்-19 வைரஸ் தொற்றினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மும்பை நகர், இந்த வைரஸ் முதலில் பரவிய சீனாவின் வூஹான் நகரையும் மிஞ்சியுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றனர்.
இதன் காரணமாக புதுடில்லியில் அமைந்துள்ள வைத்தியசாலைகளில் நோயாளர்கள் அலைமோதுவதால், பெரும்பாலான நோயாளர்களை அனுமதிப்பதற்கு வைத்தியசாலைகள் மறுத்து வருவதாக தெரியவந்துள்ளது.
எனவே உரிய சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்வதற்கு வழியின்றி அவசர நோயாளர்கள் பெருமளவில் உயிரிழந்து வருகின்றமை தொடர்பிலும் தகவல்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Photo Courtesy – BBC |
Photo Courtesy – BBC |
Photo Courtesy – BBC |