ஐக்கிய தேசிய கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளர் பாலித்த தெவரப்பெரும சிலரால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மத்துகம, வேகந்தல பகுதியில் நீர்க்குழாய் பொருத்தும் ஒப்பந்தத்தில் ஈடுபட்டிருந்த சிலருக்கும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பாலித்த தெவரப்பெருமவுக்கும் இடையில் ஒப்பந்தம் சம்பந்தமாக கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.
இதன்போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக பாலித்த தெவரப்பெரும சிலரால் தாக்கப்பட்டுள்ளதுடன், அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
பாலித்த தெவரப்பெரும காயங்களுடன் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.