July 4, 2022

அமைதியான தேர்தலுக்காக மக்களை விழிப்புணர்வூட்டும் செயற்றிட்டத்தின் ஒருகட்டமாக இன்று (24-07-2020) வவுனியாவில் மக்களை விழிப்பூட்டும் நடவடிக்கைகளை கஃபே அமைப்பு ஆரம்பித்துள்ளது.

இந்த விழிப்புணர்வு செயற்றிட்டத்தை இன்று முதல் நாட்டின் சகல மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் தெரிவித்துள்ளார்.
இந் நிகழ்ச்சித் திட்டமானது வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் முதற்கட்டமாக இன்று ஆரம்பிக்கப்பட்டது.
அதன் பின்னர் நாட்டின் சகல மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த தி;ட்டமிடப்பட்டுள்ளதாகவும் மனாஸ் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள அனைத்து மதங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கும் வகையில் இத்திட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைதியான தேர்தலை நடத்துவதில் கட்சிகளின் பங்களிப்பு குறித்து இதன்போது அவர்களுக்கு தெளிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இம்முறை பொதுத் தேர்தல் காலகட்டத்தில் அமைதியான தேர்தலுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சில சம்பவங்கள் நடந்தேறியுள்ள நிலையில், இது மோசமான நிலைக்குச் செல்வதை தவிர்ப்பதே தமது வேலைத்திட்டத்தின் நோக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக தேர்தல் மேடைகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு வேகமாக பரவுவதாகவும் தேர்தலின் அமைதிக்கு இவ்விடயம் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கஃபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இம்முறை தேர்தல் தொடர்பில் “ஹொட்ஸ்பொட்“ அதாவது அதிகளவாக இவ்வாறான சம்பவங்கள் பதிவான 10 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதில் திகாமடுல்ல மாவட்டத்தை பிரதானமாக குறிப்பிட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான ஒரு சூழலில் இம்முறை தேர்தல் நடவடிக்கைகளை அமைதியான முறையில் நடத்துவதற்கான களத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே, கஃபே அமைப்பின் நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கம் என்று கஃபே அமைப்பின் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் மேலும் குறிப்பிட்டார்.
சுதந்திமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கஃபே அமைப்பினரின் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (24.07.2020) காலை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
படங்கள் பின்வருமாரு;

Leave a Reply

Your email address will not be published.