2020 பொதுத் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் யாவும் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தன.
வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்த நிலையில் கொழும்பில் தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில், இன்றைய தேர்தல் நடவடிக்கைகள் சுமுகமாகவும், அமைதியான முறையிலும இடம்பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, வாக்கெண்ணும் நடவடிக்கைகள் நாளை காலை 7 மணியளவில் அந்தந்த பிரதான வாக்கெண்ணும் நிலையங்களில் ஆரம்பமாகவும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், வாக்குப் பெட்டிகள் யாவும் பிரதான வாக்கெண்ணும் நிலையங்களில் உரிய பாதுகாப்புடன் பேணப்படும் என்றும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.