விபத்தில் காயமடைந்து சுய நினைவின்றி கண்டி போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்த வயோதிப பெண் சிகிச்சை பலனின்றி நேற்று (30/08/2020) மரணமடைந்துள்ளார்.
கடந்த 06 ஆம் திகதி கண்டி சங்கராஜ மாவத்தை பகுதியில் இப்பெண் தனியார் பஸ் வண்டி ஒன்றில் மோதுண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சுமார் 70 வயது மதிக்கத்தக்க வௌ்ளைநிற தலைமுடியுடன், சுமார் ஐந்து அடி 2 அங்குலம் உயரமாகவும், பொதுநிறம் உடையவராகவும் காணப்படும் இந்த வயோதிப பெண், வௌ்ளை நிற பாவாடையும், நாவல் நிற சட்டையும் அணிந்திருந்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இந்த வயோதிபப் பெண்ணின் சடலம் கண்டி போதனா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவரை அடையாளம் காண்பதற்காக கண்டி போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்