ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் மட்பாண்டங்களை இன்று எம்மவர்கள் அதிகமாக வாங்காவிட்டாலும், வெளிநாட்டவர்கள் மத்தியில் அதற்கு பாரிய கேள்வி நிலவுகின்றது. எமது நாட்டில் மட்பாண்டங்களை அழகு பொருட்களாகவும் சமைத்த உணவை பரிமாறவும் பயன்படுத்துகின்றார்களே தவிர, சமைப்பதற்கும் உபயோகிப்பதற்கும் பயன்படுத்துவது மிகக் குறைவு.
இதனால், மட்பாண்ட தொழிலை நம்பி வாழும் மக்கள் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்த பாடுபடுகின்றனர். குறிப்பாக, ஹப்புத்தளையிலிருந்து வெல்லவாய செல்லும் வீதியில், மட்பாண்டங்களை செய்யும் ஒரு குழுவினர் வாழ்கின்றனர்.
நவீன உபகரணங்கள் ஏதுமின்றி, கைகளால் இவர்கள் மட்பாண்டங்களை செய்வதாலும் உரிய சந்தை வாய்ப்பு இல்லாத காரணத்தாலும் நான்கு தலைமுறைகளாக அவர்களது வாழ்க்கையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இவர்களது தயாரிப்புகளை மக்கள் கொள்வனவு செய்வதோடு, தமது தலைமுறையினர் படித்து அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்றும் இந்த தொழில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதுமே இவர்களது எதிர்பார்ப்பாகும்.
– கலாவர்ஷ்னி கனகரட்ணம்
காணொளி (VIDEO)
Link: https://www.youtube.com/channel/UCkm5WWXvdZlqWi6Na8veesw/featured