July 1, 2022

நாட்டின் பன்முகத்தன்மையை பறைசாற்றும் கையடக்கத் தொலைபேசியூடாக கதைகூறுவதை ஊக்குவிக்கும் வகையில் ஊடக மற்றும் தகவல் எழுத்தறிவு மையம் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

அந்த வகையில் தெரிவுசெய்யப்பட்ட மாவட்டங்களில் பன்முகத் தன்மையை எடுத்துக்காட்டக்கூடிய கதைகளுக்கான மூலங்களை சரியான கோணத்தில் அனுதி அவற்றை கையடக்கத் தொலைபேசி ஊடாக பதிவுசெய்தல் மற்றும் சிறந்த தொகுப்புகளாக பன்முகத்தன்மை தொடர்பாக கதைகளை கூறுவதற்கு இந்த மையம் பாரிய அர்ப்பணிப்புடன் இயங்கி வருகின்றது.

இதற்கென ஊடகவியலாளர்களை சிறந்தவாறு பயிற்றுவிப்பதற்கும்> பன்முகத்தன்மை ஊடாக சிறந்த சமூகங்களைக் கட்டியெழுப்புவதையும் நோக்காக் கொண்டு நாட்டில் புதியதொரு பரிணாமத்தை ஏற்படுத்தி வரும் ஊடக மற்றும் தகவல் எழுத்தறிவு மையம் தமது பயணம் மற்றும் நோக்கங்கள் குறித்து பின்வரும் கட்டுரையை வௌியிட்டுள்ளது.


கட்டுரை

“கேமரா ஊடாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள தேசத்தின் பன்முகத்தன்மை”

ஒரு நாட்டின் பன்முகத்தன்மை, அந்த நாட்டின் படைப்பாற்றல் உணர்வு, மாற்றம், தனித்துவம், சமூகத்தின் உணர்வு, நல்லிணக்கம் மற்றும் அன்பு போன்றவற்றிற்கு ஒளியேற்படுத்துகின்றது. எமது இலங்கை தேசம், உலக வரைபடத்தில் ஒரு சிறிய நாடாகக் காணப்பட்டாலும், எமது தீவானது சிறந்த கலாச்சார மற்றும் வரலாற்று பாரம்பரியத்தை பெருமைப்படுத்துகின்றது. அது இன்னும் தனது நாட்டு மக்களால் கண்டுபிடிக்கப்படவில்லை. இங்கு பார்ப்பதற்கு இன்னும் நிறைய விடயங்கள் உள்ளன, இன்னும் கேட்கப்படாமலும் பொதுமக்கள் சாட்சியாகவும் காணப்படும் எண்ணற்ற கதைகள் நாடெங்கும் உள்ளன. பன்முகத்தன்மை உணர்வை பேணுவதற்கு தொடர்ச்சியான விழிப்புணர்வு மற்றும் கற்றல் அவசியம். அத்தோடு, நாட்டின் பிரஜைகள் ஒவ்வொருவருடைய உளமறிந்து செயற்படல் மற்றும் ஒருவருக்கொருவர் வலுவான பிணைப்பைக் கடைப்பிடிக்க ஆரம்பிக்க வேண்டும்.

நாம் தினமும் சந்திக்காதவர்களின் உண்மையான எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கச் செய்யும் நோக்கத்துடன் பன்முகத்தன்மையை உள்வாங்கி ஐக்கியத்தை ஊக்குவித்தல் எனும் தலைப்பின் கீழ் ஊடக மற்றும் தகவல் எழுத்தறிவு மையம் (CMIL) கையடக்கத் தொலைபேசி மூலமான ஊடகவியல் திட்டத்தை தொடங்கியது. நல்லிணக்கம் மற்றும் உறவுகளை வலுவூட்டுவதன் ஊடாக திடமான ஒரு கதையை உருவாக்குவதன் முக்கியத்துவம், பொது மக்களிடையே நம்பிக்கையை வளர்த்தல், மன்னித்தல் மற்றும் நெருக்கடி நிலையில் சிந்தித்தல் ஆகிய காரணிகள் மீது கவனம் செலுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

கையடக்கத் தொலைபேசி ஊடான கதைகூறலின் பரந்த நிபுணத்துவத்தைப் பயன்படுத்துதல், பல்வேறு மத மற்றும் இன சமூகங்களான இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் ஆகியவற்றின் பன்முகத்தன்மையைப் வெளிக்காட்டவும், சமூக ஊடகங்கள் மூலம் அவற்றை ஊக்குவிக்கவும், பன்முகத்தன்மையின் வலிமை குறித்து செயலில் உரையாடலை உருவாக்கும் நோக்கில் CMIL இந்த திட்டத்தை வடிவமைத்தது. இதன்மூலம் சமூகங்களிடையே உள்ள வேறுபாடுகளுக்கு பரஸ்பர புரிதலையும் மரியாதையையும் ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.

இத்தகைய கதைகளை ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி கேமரா மூலம் கூறுவதற்காக, நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களின், வேறுபட்ட இன மற்றும் மத பின்னணியைச் சேர்ந்த எட்டு பெண் ஊடகவியலாளர்கள் வருகை தந்திருந்தார்கள். இதில் மும்மொழி பேசும் மற்றும் சகல மதத்தையும் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பங்குபற்றினார்கள். தெரிவுசெய்யப்பட்ட அமைவிடத்திற்கு அவர்கள் ஈடுபடுத்தப்படுவதற்கு முன்னர், பல்வகைமைத்தன்மையை பிரதிபலிக்கக்கூடியதான அவர்களின் கதைகள் தொடர்பான ஆய்வுகள் ஆரம்பமாகின. அதன் பின்னர் இளைய மற்றும் தனிப்பட்டவர்களின் பங்களிப்புடன் இலக்கு குழு கலந்துரையாடல்களின் ஊடாக பல்வமைத்தன்மை தொடர்பான தெளிவுடன் முதற்கட்டம் ஆரம்பமானது.

ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பிக்குமாறு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த செயற்பாடு வெற்றியளித்ததுடன், பல்வேறு கருத்துப் பதிவுகளும் zoom ஊடான இரண்டு வெவ்வேறு இலக்கு குழு கூட்டங்கள் மூலம் பதிவுசெய்யப்பட்டது. பால்நிலை சமத்துவ அடிப்படையிலும், வயதுப் பிரிவுகள், கல்விப் பின்னணி, புவியியல் ரீதியான பிரதேசங்கள், இனம் மற்றும் மதம் ஆகிய பல்வமைத்தன்மையின் பிரகாரம் விகிதாசார ரீதியில் பங்குபற்றல் இடம்பெற்றது.

பல்வமைத்தன்மை விடயம் தொடர்பாக பங்குபற்றியவர்களின் தனிப்பட்ட கண்ணோட்டம் மற்றும் எதிர்ப்பார்ப்பு என்பவற்றின் பிரகாரம் இலக்கு குழு கூட்டங்கள் இடம்பெற்றன. பிரஜைகளாக தங்களுக்குள் அல்லது அவர்களது சமூகங்களிடையே பொதுவானவை என அவர்களால் உணரப்பட்ட பிரச்சினைகள், மற்றும் பின்னர் குறிப்பிடப்பட்ட புவியியல் ரீதியான பிரதேசங்களை பட்டியலிடல், அதன் பின்னர் CMIL இனால் ஒப்படைக்கப்பட்ட யைடக்கத் தொலைபேசி மூலமான கதைகூறல் வெளிக்கொண்டு வரப்பட்டன. கதைகளின் சூழல், இனம் மற்றும் மதத்தின் கூறுகளில் கவனம் செலுத்துவதோடு மட்டுமன்றி, மக்களது வாழ்வாதாரங்கள், சமூகங்கள், பெண் தலைமைத்துவம் உள்ள வீடுகள், கலை மற்றும் கலாசாரம், ஓரங்கட்டப்பட்ட சமூகங்கள், LGBTQI சமூகங்கள் மற்றும் வறுமையின் கீழுள்ள மக்கள் பற்றியும் விடயங்கள் பிரதிபலிக்கப்பட்டுள்ளன. இலக்குக் குழு அமர்வுகளின் உள்ளடக்கங்கள் மூலம் அடுத்தகட்ட கதைகூறலை முன்னெடுப்பதற்கு CMIL ஊழியர்களால் ஒரு பயிற்சி செயலமர்வு நடத்தப்பட்டது. அந்த செயலமர்வில் அவர்கள் கையடக்கத் தொலைபேசி மூலமான ஊடகவியல் தொடர்பில் கூடுதல் பயிற்சிகளையும் பெற்றுக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பதுளை, மொனறாகலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் திருகோணமலை போன்ற மாவட்டங்களில், பன்முகத்தன்மை, கலாசார பிரதிபலிப்புகள், மத நடைமுறைகள் மற்றும் சமூக உணர்வை வலியுறுத்தும் 11 வீடியோ கதைகளை எமது கதைசொல்லிகள் தயாரித்தனர். யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய பறை வாத்தியம், திருகோணமலை கிராமத்தைச் சேர்ந்த ஒற்றைத் தாய்மார்களின் வாழ்க்கை, கரடியன்குளத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கை முறை, வாகரை பகுதியைச் சேர்ந்த வேடர்களின் வாழ்க்கையைப் பற்றிய பார்வை, சமூகத்தில் தனது அடையாளத்தை உறுதிப்படுத்த போராடும் திருநங்கைகளின் வாழ்க்கை, மொனறாகலை மாவட்டத்தில் பாராவெல பகுதியில் வாழும் மக்களின் கதை, துப்பரவு பணியாளர்கள் சமூகத்தில் ஓரங்கட்டப்படுதல் மற்றும்  வெல்லவாய பகுதியில் வாழும் ஒருதொகுதி மட்பாண்ட தொழிலாளர்களில் வாழ்க்கைச் சுமை ஆகியவற்றை உள்ளடக்கி இக்கதைகள் அமைந்தன.

இக்கதைகள் யாவும் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. பொதுவாக பிரதான ஊடகங்களில் பேசப்படாத பன்முகத்தன்மையின் அளவைப் பற்றி மக்களுக்கு அறிவூட்ட உதவும் ஒரு உறுதியான வழி இதுவாகும். ஒருவருடைய சொந்த பாரம்பரியத்தைத் தழுவுவது மட்டுமல்லாமல் மற்றவர்களின் பாரம்பரியம், கலாசாரம், மரபு ஆகியவற்றையும் மதிக்க வேண்டும் என்ற செய்தியை பரவச்செய்வது அவசியம். இந்த வீடியோக்கள் தற்போது பிரபலமான சமூக ஊடக தளங்கள் வழியாக பரவலாக பகிரப்பட்டு வருகின்றன, மேலும் இந்த இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் ‘ஊடக மற்றும் தகவல் எழுத்தறிவு மையம்’ யூடியூப் சேனல் வழியாக பார்க்கலாம். ( https://www.youtube.com/channel/UCkm5WWXvdZlqWi6Na8veesw/videos ). சர்வோதய அமைப்பு மற்றும் அமெரிக்க தூதரகத்தின் ஆதரவில் CMIL இந்த திட்டத்தை முன்னெடுத்திருந்தது.

ஊடக மற்றும் தகவல் எழுத்தறிவு மையம் என்பது ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பாகும். இது விமர்சன ரீதியான தகவல் நுகர்வு (Critical Information Consumption) டிஜிட்டல் மீடியா மற்றும் தகவல் எழுத்தறிவு (Digital Media and Information Literacy) ஆகியவற்றை அனைத்து வயதினரிடையே ஊக்குவிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுகின்றது. இலங்கையில் தகவல்களை ஜனநாயகமயமாக்குவதில் அவர்களை சுறுசுறுப்பான மற்றும் துடிப்பான குடிமக்களாக செயற்படுத்தும் நோக்கில் இச்செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published.