இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் நலன்களுக்காக தமது அரசாங்கம் தொடர்ந்தும் முன்நிற்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணத்திற்குச் சென்றுவந்த இந்தியாவின் ஒரே பிரதமராகவும் தாம் திகழ்வதாக நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுதவிர புலம் பெயர் தமிழர்களுக்காக 50,000 வீடுகள், மலையக தோட்டப்புற மக்களுக்கான 4000 வீடுகள், டிக்கோயா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் – மன்னார் ரயில் பாதை அமைப்பு, யாழ்ப்பாணம் – சென்னை விமானப் போக்குவரத்து, யாழ்ப்பாண கலாசார நிலைய நிர்மாணம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை இலங்கையிலுள்ள தமிழர்களுக்காக இந்தியா மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய மீனவர்களின் நியாயமான உரிமைகளை தமது அரசாங்கம் பாதுகாக்கும் என்றும், மேலும் பல்வேறு விடயங்கள் குறித்தும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் உரையாற்றினார்.
தமிழகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக இன்று (14/02/2021) நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி இந்த விடயங்களைக் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் உரை (காணொளி)
தமிழ் மொழிபெயர்ப்பு உள்ளது
#NarendraModi #India #Chennai #Tamilnadu #SriLanka #LK #Jaffna #Tamils