21 வருடங்களாக காலதாமதமாகியிருக்கும் சிறுவர் பாதுகாப்பு தேசிய கொள்கையை விரைவில் அமுல்படுத்துமாறு கோப் குழு பரிந்துரைத்துள்ளது.
இதுதொடர்பான அறிவுரைகளை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகளுக்கு கோப் என அழைக்கப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் சரித ஹேரத் வழங்கியுள்ளார்.
கடந்த 12 ஆம் திகதி கூடிய கோப் குழு கூட்டத்தின்போதே தாமதமாகியுள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கையை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுத்தல், துஷ்பிரயோகத்திற்கு இலக்காகும் பிள்ளைகளை பாதுகாத்தல், அவர்களுக்கு சிகிச்சையளித்தல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் தேசிய கொள்கையைத் தயாரிப்பதற்காக 1998 ஆம் ஆண்டில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஸ்தாபிக்கப்பட்டது.
எனினும், சிறுவர் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் 21 வருடங்கள் காலதாமதமாகியுள்ளமை கடந்த கோப் குழு கூட்டத்தின்போது புலப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#COPE #Parliament #SriLanka #LK #COVID-19 #CoronaVirus #ChildSecurity #news