நாட்டில் பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருந்த கொவிட்-19 தொற்று காரணமாக உயிரிழக்கும் ஜனாசாக்களின் எரிப்பு விவகாரத்திற்கு தீர்வாக நல்லடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் சற்று முன்னர் வௌியாகியுள்ளது.
இதுதொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சியின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே வௌியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்த “பூதவுடலின் தகனம்” எனும் சொற்களுக்குப் பதிலாக “பூதவுடலின் தகனம் அல்லது அடக்கம்” என்னும் சொற்கள் இந்த அதிவிசேட வர்த்தமானியில் சேர்க்கப்பட்டுள்ளன.
அத்துடன் அடக்கம் செய்வது தொடர்பான மேலும் சில திருத்தங்களும் சற்று முன்னர் வௌியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் ஜனாசா எரிப்பு விவகாரம் குறித்து அழுத்தங்கள் விடுக்கப்பட்டுவரும் சூழ்நிலையில், இலங்கைக்கு இஸ்லாமிய நாடுகள் அமைப்பின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் தேவை காணப்படுவதாகவும், அதன் நிமித்தமாகவே ஜனாசா நல்லடக்கத்திற்கு அனுமதியளிக்கும் வகையில் வர்த்தமானியில் திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் அவதானிகள் சுட்டுக்காட்டுகின்றனர்.
அதிவிசேட வர்த்தமானியைப் பார்வையிட:
http://documents.gov.lk/files/egz/2021/2/2216-38_T.pdf
Tags: #Covid-19, #Janaza, #BurialRights, #Muslims, #SriLanka, #LK #Cremation