July 2, 2022

மதங்களுக்குள் மறைந்துள்ள பிணைப்பு…

மதத்தின் பெயரால் இன்று பல நாடுகளில் பிரச்சினைகள் வெடிக்கின்ற போதும், எமது வரலாற்றில் ஒவ்வொரு இனமும் மதமும் ஒன்றித்து வாழ்ந்தமைக்கான சான்றுகள் பலவுள்ளன.

இலங்கையை எடுத்துக்கொண்டால் கதிர்காமத்தை உதாரணமாக குறிப்பிட முடியும். இன, மத பேதமின்றி அங்கு சகல மதத்தினரும் வருகைதருவதோடு, தத்தமது நம்பிக்கையின் பிரகாரம் வழிபாட்டை நிகழ்த்திச்செல்கின்றனர்.

முருகன் என்றதும் நிச்சயம் வள்ளியின் பெயர் அனைவருக்கும் நினைவில் வரும். ஆனால், வள்ளி குகை எனப்படும் ஒரு இடம் உள்ளமை பலருக்கு தெரியாது. கதிர்காமம் மாணிக்க கங்கையிலிருந்து சற்று தொலைவில் காணப்படும் இந்த குகை ஏழுமலை என்ற இடத்தில் முடிவடைகின்றது. அங்கு வள்ளி பயன்படுத்திய அம்மி, குளவி, ஊஞ்சல் என்பன இன்றும் உள்ளதாக நம்பப்படுகின்றது. அவர் நீராடியதாக நம்பப்படும் கிணற்றை தூரத்திலிருந்து பார்க்க முடியும்.

வள்ளியின் வரலாறு பற்றிய நாம் அங்கு வந்த மக்களிடம் கேட்டபோது,  மதத்தை தாண்டி அவர்கள் தாம் அறிந்த கதைகளை எம்மிடம் கூறினர். தமிழ்க் கடவுள் என்ற விசேட நாமம் முருகனுக்கு மட்டுமே உள்ளது. ஆனால், சகல இன மத மக்களும் இங்கு ஒன்றாக வந்து, ஒரே நாமத்தைக் கூறி வழிபடுபவதும் வரலாற்று கதைகளை அறியும் ஆவலுடன் வள்ளி குகையில் உள்ள பாரம்பரிய சின்னங்கள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை தேடிப்பார்த்ததும் சிறப்பம்சமாகும்.

கதிர்காமத்திற்குச் செல்வோர் இவ்வாறான பாரம்பரிய இடங்களை பற்றி தெரியாத நிலையில், அதனை வெளிப்படுத்தும் ஒரு ஆவணத் தொகுப்பாகவும் ஒரு வணக்கஸ்தலத்தில் காணப்படும் ஒற்றுமை, எமது வாழ்க்கையிலும் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக இன்டர்நியுஸ் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் சுயாதீன ஊடகவியலாளர் கலாவர்ஷ்ணி கனகரட்ணம் இந்த ஆவணக்கதையை உருவாக்கியுள்ளார்.

Video courtesy: Globe Tamil 

Leave a Reply

Your email address will not be published.