நாட்டில் நாளொன்றில் அறிவிக்கப்பட்ட அதிகபட்ச மரணங்களின் எண்ணிக்கை இன்று பதிவாகியது.
இதன் பிரகாரம் இன்றைய தினம் (08) 54 மரணங்கள் பதிவாகியதுடன், இதுவரை பதிவாகிய கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1844 ஆக உயர்ந்துள்ளது.
இந்த மரணங்களில் 22 பெண்களும், 32 ஆண்களும் அடங்குகின்றனர்.
இன்றைய தினம் அறிவிக்கப்பட்ட மரணங்களில் 15 பேரின் மரணங்கள் மே 10 முதல் 31 ஆம் திகதிக்குட்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன், ஏனைய 39 கொவிட் மரணங்களும் ஜூன் 02 முதல் 07 வரையில் பதிவாகியதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.