எனவே ஊழலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஊடகங்கள், சிவில் சமூகம், தனியார் துறையினரின் ஈடுபாடு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஊழலுக்கு எதிரான முதலாவது ஐநா பொதுச் சபையின் சிறப்பு அமர்வு (UNGASS) நியூயோர்க்கில் ஜூன் 2 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரை நடைபெற்றது.
உலக நாடுகளின் ஒன்றிணைவுடன் சர்வதேச ஒத்துழைப்புகளை வலுப்படுத்தல், ஊழலைத் தடுத்தல் மற்றும் அதற்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்ளல் என்பன தொடர்பில் காணப்படும் சவால்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து இந்த அமர்வில் கலந்துரையாடப்பட்டது.
இந்த சிறப்பு அமர்வில் இலங்கை சார்பாக ஐநாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதேவேளை, குற்றச் செயல்களினால் பெறப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டத்தினை துரிதப்படுத்தி அதனூடாக பொது கொள்முதல் மற்றும் இறுதிப் பயனடையும் உரிமம் கொண்ட கம்பனிகளின் வெளிப்படைத்தன்மையினை வலுப்படுத்த உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என TISL மீளவும் வலியுறுத்துகின்றது.
மொஹான் பீரிஸின் ஐநா சிறப்பு அமர்வின் உரையை பாராட்டியுள்ள ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் இதன்பொருட்டு பல ஆண்டுகளாக குரல்கொடுத்து வருவதாகவும் அறிக்கையொன்றின் ஊடாக சுட்டிக்காட்டியுள்ளது.
ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை சிறப்பு அமர்வில் ஆங்கிலத்தில் மொஹான் பீரிஸ் உரையாற்றிய காணொளியை பின்வரும் லிங்க் மூலம் பார்வையிடடலாம்.
#UNGASS #UNO #SL #SriLanka #Corruption #MohanPeiris #youtube #facebook #SocicalMedia #news