July 2, 2022

பேருவளை மற்றும் காலி பகுதிகளில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் முஹம்மது சாத் கட்டாக் உணவு நிவாரணங்களை விநியோகித்துள்ளார்.

அந்த பகுதிகளுக்கான நேரடி விஜயத்தில் ஈடுபட்ட (12-06-2021) பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்வையிட்டதுடன், அவர்களுக்கான உணவுப் பொருட்களையும் பாகிஸ்தான் அரசாங்கம் சார்பாக பகிர்ந்தளித்தார்.

இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த டி சில்வா மற்றும் அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா ஆகியோரும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் இந்த விஜயத்தில் இணைந்துகொண்டனர்.

இக்கட்டான சூழ்நிலைகளில் பாகிஸ்தான்  இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிக்கரம் நீட்டும் என பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் இதன்போது சுட்டிக்காட்டியதுடன்,  இரண்டு நட்பு நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் நிவாரண உதவிகளும், முழு ஆதரவும் தொடரும் என்றும் குறிப்பிட்டார். 

மேலும் , இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்க பாகிஸ்தான் அரசாங்கம் எப்போதும் உறுதியுடன் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.