ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட ஊடகவியலாளர் மேனகா மூக்காண்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
மேனகா மூகாகண்டி, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப்பிரிவு பொறுப்பதிகாரியாகவும், பிரதிப் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
நுகேகொட தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான இவர், இலங்கை இதழியல் கல்லூரியில் துறைசார் கற்கையை நிறைவுசெய்துள்ளார்.
15 வருடகால தனது ஊடக வாழ்வில் சிறந்த ஊடகவியலாளராலாளராகவும், செய்தி ஆசிரியராகவும் திறமையுடன் செயலாற்றியுள்ளதுடன், இந்த புதிய நியமனத்திற்கு முன்னதாக அவர் ‘தமிழ்மிரர்’ பத்திரிகையின் செய்தி ஆசிரியராகக் கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLanka #Local #news #tamils #politics #assualt #covid #vaccine #Media #PMD