வவுனியா வாடிவீட்டின் முகாமையாளரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக வவுனியா நகர மேயர் ராசலிங்கம் கௌதமன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வவுனியா வாடிவீட்டின் முகாமையாளர் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் அங்கிருந்த இரண்டு பணியாளர்களை அச்சுறுத்தியமை ஆகிய சம்பவங்களின் பிரகாரம் மேயருக்கு எதிராக வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்று (15/06/2021) இரண்டு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா பொலிஸார், மேயரைக் கைதுசெய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLanka #Northern #province #Local #news #vavuniya_uc #Mayor #arrest #tamils #politics #assualt #covid #vaccine