![]() |
Picture courtesy: FleetMon |
இந்து சமுத்திரத்தின் இலங்கை மற்றும் மலாக்கா நீரிணைக்கு இடையில் மற்றுமொரு கொள்கலன் கப்பலின் இயந்திர அறையில் தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
MSC MESSINA என்ற கொள்கலன் கப்பல் நேற்று (24-06-2021) இரவு தீ அனர்த்தத்திற்கு உள்ளனதாவும், இதனால் கப்பல் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் கடல்சார் செய்திகளை வௌியிடும் இணையத்தளங்களில் செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
கப்பல்களின் போக்குவரத்தைக் கண்காணிக்கும் சர்வதேச நிறுவன இணையத்தளங்களில் இந்த கப்பல் தொடர்ந்தும் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து சிங்கப்பூர் நோக்கிச் செல்லும் வழியிலேயே MSC MESSINA அனர்த்தத்திற்கு உள்ளாகியிருப்பதாக மேலும் தெரியவந்துள்ளது.