குருநாகல் சிறையிலிருந்து தப்பிச்சென்ற நான்கு கைதிகளில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் விநியோக குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு கைதிகள் குருநாகல் சிறைச்சாலையில் இருந்து இன்று தப்பிச் சென்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்த கைதிகள் நால்வரும் நீதிமன்ற விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவதற்காக தடுத்து வைக்கப்பட்டிரு்ந்த நிலையில் தப்பிச் சென்றுள்ளனர்.
குருநாகல் வெல்வல, துருளியகம, மாவத்தகம, தெல்கொல்ல பகுதிகளைச் சேர்ந்த 20, 26 மற்றும் 27 வயதுகளையுடைய கைதிகளே சிறையில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தலைமறைவாகியுள்ள ஏனைய மூன்று கைதிகளையும் கைதுசெய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.