July 4, 2022

Facebook ஊடாக இழிவுபடுத்தினார்கள் என்ற கோபத்தில் இரண்டு இளைஞர்களை சூட்சுமமாக கடத்திச் சென்று சிலுவையில் அறைவது போன்று மரப் பலகைகளில் வைத்து ஆணியடித்தமைக்காக கண்டி – பலகொல்ல பகுதியைச் சேர்ந்த பூசாரி உட்பட சந்தேகநபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

கண்டி – பலகொல்ல பகுதியைச் சேர்ந்த தேவாலயமொன்றின் பூசாரியினால் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட குறிப்பிட்ட இரண்டு இளைஞர்களும் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Facebook ஊடாக தன்னை இழிவுபடுத்தியமைக்குப் பழிவாங்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு இளைஞர்களையும் தனது வீட்டிற்கு அழைத்த பூசகர், அவர்களை அம்பிட்டிய பகுதிக்கு கூட்டிச்சென்றுள்ளார்.

அங்கு மேலும் சில சகாக்களுடன் இணைந்து குறிப்பிட்ட இளைஞர்கள் இருவரையும் தாக்கியதுடன், சிலுவைப் போன்ற மரப் பலகைககளில் வைத்து இளைஞர்களின் கைகளில் ஆணியடித்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த சம்பவத்தை அடுத்து சந்தேகத்திற்குரிய பூசகரும், அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய குழுவினரும் பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளனர்.

இந்த சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்கான மேலதிக விசாரணைகளை பலகொல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.