July 4, 2022

இலங்கைக்கு 2 மில்லியன் COVID19 தடுப்பூசி மருந்துகளை விநியோகிப்பதற்கு #Sinopharm நிறுவனம் உறுதியளித்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

இந்த தகவல் இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையினால் கோரப்பட்ட #Sinopharm தடுப்பூசி மருந்துகளை ஶ்ரீலங்கன் விமான சேவைகள் ஊடாக ஜூலை 2 மற்றும் 4 ஆம் திகதிகளில் விநியோகிக்கப்படும் என்றும் சீனத் தூதரகம் தனது டுவிட்டர் தளத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

ஒரு விமானத்தில் ஒரு மில்லியன் மருந்துகள் வீதம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படுவதுடன், மேலும் 2 மில்லியன் COVID19 தடுப்பூசி மருந்துகளை ஜூலை மாதத்திற்குள் அனுப்புவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இதன்மூலம் இலங்கையின் COVID19 தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும் என்றும் அந்த டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.