July 1, 2022
President Gotabaya Rajapakse directs the health authorities to complete the vaccination, age over 30 in the Western Province. 

மேல் மாகாணத்தில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், ஜூலை 31ஆம் திகதிக்கு முன்னர் கொவிட் தடுப்பூசிகளை வழங்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, சுகாதாரத் தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து, கொவிட் ஒழிப்பு விசேட குழு உறுப்பினர்களுடன் இன்று (02) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே, ஜனாதிபதி இந்தப் பணிப்புரையை விடுத்தார். 

தற்போது கொழும்பு மாவட்டத்தில் குறிப்பிட்ட வயதுப் பிரிவைச் சேர்ந்த 60 வீதமானவர்களுக்கும், கம்பஹா மாவட்டத்தில் 47 வீதமானவர்களுக்கும், களுத்துறை மாவட்டத்தில் 34 வீதமானவர்களுக்கும் முதலாவது டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 

கொள்வனவுக்கான கட்டளைகள் முழுமைப்படுத்தப்பட்டிருக்கும் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றதும், முறையான ஒரு திட்டத்தின் கீழ் செப்டெம்பர் மாதத்துக்கு முன்னர், நாட்டின் அனைத்துப் பிரதேசங்களுக்கும் அதிகளவு தடுப்பூசிகளை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார. 

இரண்டாம் டோஸூக்குத் தேவையான அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசிகள் விரைவில் கிடைக்குமென ஜனாதிபதி இதன்போது நம்பிக்கை வெளியிட்டார். 

அந்த வகையில், அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டுள்ள அனைவருக்கும், அதன் இரண்டாவது டோஸை முறையாக வழங்குவதற்குத் திட்டமிடுமாறும், ஜனாதிபதி சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். 

Leave a Reply

Your email address will not be published.